Author: THE GREAT INDIA NEWS

Category: district

பெரம்பலூர் : விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் : பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடையால் இன்று வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம். விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி : வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் ஊருக்குள் சுற்றி வருவதால் வனத்துறையினர் எச்சரிக்கை. சானமாவு , பீர்ஜெபள்ளி , ராமபுரம் உள்ளிட்ட கிராமங்களில் குட்டியுடன் காட்டுயானை சுற்றிவருகிறது. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் போது பொதுமக்கள் கவனத்துடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தல். கோவை : தடாகம் பகுதியில் செங்கல் சூளை மற்றும் விவசாய நிலங்களில் இரும்பு & செம்பு கம்பிகளை திருடி வந்த செல்வம்(19) , சிவகுமார்(16) கைது சேலம் : மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் சென்னை : வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகைகள் & பணம் கொள்ளை - ஐசிஎப் போலீசார் விசாரணை தென்காசி : கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சியில் தனியார் பள்ளி வாகனம் மோதியதில் மாணவர் உயிரிழப்பு. பேருந்து நிலையம் அருகே வளைவில் திரும்பும் போது பள்ளி வாகனம் மோதியதில் மாணவன் உயிரிழப்பு நாமக்கல் : இன்று முதல் கிசான் கடன் அட்டை மற்றும் PMKISAN பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ ஊக்கத்தொகை முகாம் நடைபெறுகிறது. புதுச்சேரி : அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு - இந்திய தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் கலைப்பிரியன் உள்ளிட்டோர் கைது. கருப்பு பலூன் பறக்கவிட திட்டமிட்ட பலூன் விற்பனையாளர் ஜெய்சங்கர் என்பவரும் கைது சேலம் : மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் ஏகாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இன்று கிராமசபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,salem news,chennai news,pondichery news,namakkal news,tenkasi news,coimbatore news,krishnagiri news,teni news,perambalur news

Tags:

Comments & Conversations - 0