Author: முத்தையா

Category: மாவட்டச் செய்தி

தேசிய அளவிலான மெஹா மக்கள் நீதிமன்றமானது, (தேசிய மெஹா லோக் அதாலத்தில்) தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்திரவின்படி, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 2 மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இதர 4 இடங்கள் என்று மொத்தம் 6 நீதிமன்றங்களில் இன்று நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி என். குணசேகரன் தலைமையில் (13.05.2023) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்றது.(தேசிய மெஹா லோக் அதாலத்த) 

இந்த நாமக்கல் மாவட்ட தேசிய மாபெரும் மக்கள் நீதிமன்றத்தின் (தேசிய மெஹா லோக் அதாலத்தின்) மூலம் வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துகொள்ள வழிவகை செய்யபட்டது.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலாவது அமர்வில் நீதிபதிகள் டி. முனுசாமியும் இரண்டாவது அமர்வில் ஜி. கிருஷ்ணனனும், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி. மோகன்குமார், ஏ.சரண்யா, ஏ. சுரேஷ்பாபு ஆகியோர் களும் ,

இராசிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சாந்தியும், பரமத்தி நீதிமன்றத்தில் நீபதிகள் ஜி. பிரபாகரன், ஜே. கண்ணன் ஆகியோர் களும் மற்றும் அட்டவணை இடப்பட்ட வழக்கறிஞர்கள் ஆர். ஐயப்பன், ஜி. சதீஸ்குமார், கே. ஜெயராஜ் ஆகியோர் களும் அடங்கிய அமர்வுகள் வழக்குகளை விசாரணை செய்தனர்.

இதில் குமாரபாளையம் மற்றும் சேந்தமங்கலம் நீதிமன்ற வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தை என். குணசேகரன், தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, பி. சாந்தி, முதன்மை குற்றவியல் நீதிபதி மற்றும் சி. விஜய்கார்த்திக், செயலாளர்/சார்பு நீதிபதி ஆகியோர்கள் மேற்பார்வையிட்டனர்.

இந்நீதிமன்றத்தில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டு இந்நீதிமன்றங்களில் மிக விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது.

இங்கு நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கும் சமரச முறையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது

இந்நீதிமன்றங்களில் தீர்வு காணப்படுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றால், முத்திரைதாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப பெறும் வாய்ப்பு, வழக்குகளில் தீர்வு கண்டதும் அதற்கான தீர்ப்பு நகல் உத்திரவு உடனே வழங்கபடும்,

மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்மீது மேல்முறையீடு செய்ய இயலாது,

மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற வேறுபாடு இருக்காது, மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளர்களுக்கு செலவின்றி விரைவாக நீதிகிடைக்க வழிவகை செய்யபட்டும்.

இம்மக்கள் நீதிமன்றத்தின் ஏற்பாடுகளை, மாவட்ட தலைமை நீதிபதி அவர்களின் தலைமையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சி. விஜய் கார்த்திக் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

நாமக்கல் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 2399 வழக்குகள் எடுத்துகொள்ளபட்டு

1797 வழக்குகளுக்கு ரூ.6 கோடியே 57 லட்சத்து 49 ஆயிரத்து 761 மதிப்பிலான தொகையானது தீர்வு காணபட்டது.

Tags:

#namakkalnews , #namakkalnewsintamil , #namakkalnewslive , #namakkalnewstoday , #namakkalnewstodaytamil , #namakkalnewtodayslive #namakkalnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #namakkaltodaynews , #namakkallatestnews , #namakkalnews , #Latesttamilnadunewstamil , #spiritual #devotional #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0