• முகப்பு
  • குற்றம்
  • சாத்தான்குளம் அருகே 2200 கிலோ கஞ்சா பறிமுதல் தூத்துக்குடியை சேர்ந்தவர் தோட்டத்தில் பறிமுதல் யானை தந்தம் கடத்திய வழக்கில் தொடர்புடையவர்.

சாத்தான்குளம் அருகே 2200 கிலோ கஞ்சா பறிமுதல் தூத்துக்குடியை சேர்ந்தவர் தோட்டத்தில் பறிமுதல் யானை தந்தம் கடத்திய வழக்கில் தொடர்புடையவர்.

மாரிமுத்து

UPDATED: May 10, 2023, 7:20:31 AM

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவின்படி ஆப்ரேஷன் 4 ஓ படி தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டை தொடர்ந்து வருகிறது.

அதன்படி சில தினங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த பால்பாண்டி மகன் ராஜ்குமார் வயது 45 அதுபோல கண்ணன் மகன் சுகுமார் வயது 42 இவர்களை கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடத்திலிருந்து கஞ்சா வாங்கியதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் புதுக்குளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டதில் 82 மூட்டையில் 2200 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு இருந்த 1 வேன் 2 கார் 3 பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இதில் தொடர்புடைய நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தோட்டம் சசிகரன் என்பவருடைய தோட்டம் இந்தத் தோட்டத்தை தூத்துக்குடி திரைப்படத்தைச் சேர்ந்த ஆரோன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்த தோட்டத்தில் இருந்து தான் கஞ்சா மொத்தமாக இருப்பு வைத்து பல்வேறு பகுதிகளுக்கு ஆரோன் சப்ளை செய்துள்ளார்.

இலங்கைக்கு பலமுறை கடத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆரோன் மீது 2015ல் யானை தந்தம் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது  தமிழகத்தையே பரபரப்பு உண்டாக்கி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை பகுதியை ஒட்டி உள்ளதால் வேறு மாநிலம் வேறு நாட்டிற்கு கஞ்சா கடத்துவதற்கு வசதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended