• முகப்பு
  • 15.4.2022 இரவு 10 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை...

15.4.2022 இரவு 10 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை : சாந்தோம் பசிலிகா, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், ஜெமினி கதீட்ரல் தேவாலயம், உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னை : முழுவதும் கடந்த 6 மாதமாக பஸ் பயணிகளிடம் பிக்பாக்கெட் 5 கொள்ளையர்கள் பிடிபட்டனர்: 108 செல்போன்கள், பைக், ஆட்டோ பறிமுதல். சென்னை : திருவல்லிக்கேணி ரோட்டரி நகரில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து முகமது மீரான் என்பவர் உயிரிழந்துள்ளார். மின்கோளாறு காரணமாக ஏசியில் ஏற்பட்ட தீ பரவி கேஸ் சிலிண்டர் வெடித்ததில் முகமது மீரான் உயிரிழந்தார். சேலம் : ஆத்தூரில் உள்ள புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் இயேசுவின் பாடுகளை உணர்த்தும் வகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். ஆலயத்தில் இருந்து ராணிப்பேட்டை மெயின்ரோடு வழியாக கல்லறை தோட்டம் வரை இயேசுவின் பாடுகளை தத்ருபமாக நடித்து காண்பித்தபடி மனம் உருக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை : சீர்காழி அருகே நடராஜபிள்ளைச்சாவடியில் நின்றிருந்த கார் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காரில் பயணம் மேற்கொண்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. விசாரணை மேற்கொண்டார். நாகை : நீரை தேக்கி வைக்கவும், உப்புநீர் புகாத வகையிலும் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் : விவசாயிகள் வலியுறுத்தல். நீலகிரி : ஊட்டியில் 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஊட்டியில் கொட்டும் கோடை மழையால் கடல்போல் காட்சி அளிக்கும் டைகர்ஹில் அணையை பார்த்து ரசித்தனர். விருதுநகர் : காரியாபட்டி, நரிக்குடியில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம். திண்டுக்கல் : குஜிலியம்பாறையில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் பயன்பாடின்றி திறந்த வெளி பாராக உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் : அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.118.46 கோடியில் மைய கட்டுமான பணி: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு. சேலம் மாவட்டத்தில் : மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. சேலம் : வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. வாழப்பாடி சிங்கிபுரம் முத்தம்பட்டி பொன்ன்னராம்பட்டி, சின்ன கிருஷ்ணாபுரம் பெரிய கிருஷ்ணாபுரத்திலும் கனமழை பெய்தது. நீலகிரி : குன்னூர் காட்டேரி பூங்கா அருகே ரண்ணிமேடு ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளை காட்டுயானைகளால் விரட்டியதால் பரபரப்பு. ஓடி உயிர் தப்பினர். #மாவட்டச்செய்திகள் #districtnews #tamilnewslive #newstamil #breakingtamilnews #tginews #thegreatindianews #news #todaytamilnews

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended