• முகப்பு
  • கல்வி
  • பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 13,777 மாணாக்கர்கள் தேர்வு பெற்று 96.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 13,777 மாணாக்கர்கள் தேர்வு பெற்று 96.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மாமுஜெயக்குமார்

UPDATED: May 8, 2023, 10:35:47 AM

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,790 மாணவர்களும், 7, 516 மாணவியர்களும் என மொத்தம் 14, 306 மாணவர்- மாணவியர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

08-ந் தேதி திங்கள் தேர்வு முடிவுகள் வெளியிட்ட முடிவின்படி 6,413 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 94.95 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7,364 மாணவியர்கள் தேர்ச்சி பெற்று 97.98 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் மாவட்ட அளவில் 13,777 மாணாக்கர்கள் தேர்வு பெற்று 96.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவிபெறும் 37 மேல்நிலைப்பள்ளிகளில் 08 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர் - மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் செய்தில் குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended