Author: மாரிமுத்து

Category: குற்றம்

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டை நடைபெற்று வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து,

மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் அந்தத் தோட்டத்தில் சென்று பார்த்த போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த  வண்டியை சோதனை செய்தபோது, வண்டியில் இருந்த மீன் டப்பாக்களுக்கு இடையே மூன்று சாக்கு பையில் கஞ்சா இருந்தது.

அதனை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 120 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் சென்று விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்கு பின்பு எஸ் பி பாலாஜி சரவணன் கூறுகையில் ஏற்கனவே சூரங்குடியில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தற்போது திருச்செந்தூரில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் அடிப்படையில் சில பேரை பிடித்து விசாரணை செய்து வருகிறோம்.

விசாரணைக்கு பின்பு உண்மை தெரிய வந்தவுடன் அந்த நபர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு காவல்துறை தலைவர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த கஞ்சா இங்கிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் கூறினார்.

Tags:

#Tuticorinnews, #tuticorinnewstoday , #ganja #abin #drugs #tuticorinnewspapertoday , #tuticorinnewspaper, #Tuticorinnewschannel , #Tuticorinnewsupdate, #Tuticorinlatestnews, #Tuticorinnews , #Tuticorinnewstodaylive , #Tuticorinlatestnews, #latestnewsintuticorin ,#thegreatindianews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தூத்துக்குடி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltuticorin , #todaynewstuticorin #tamilnadu , #தூத்துக்குடிசெய்திகள்
Comments & Conversations - 0