• முகப்பு
  • aanmegam
  • கும்பகோணம் அருகே சுவாமிமலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார் , இதனைத் தொடர்ந்து சண்முகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . தொடர்ந்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு யாகம் நடைபெற்றது 108 சங்காபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . தொடர்ந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended