Author: THE GREAT INDIA NEWS

Category: india

இரண்டாண்டுகளில் இரு மடங்கு.. ரூபாய் 500 கள்ளநோட்டுகள் 102% அதிகரிப்பு: RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல். 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி, இரவு எட்டு மணியை இந்தியர்கள் யாரும் வாழ்நாளில் மறக்கமுடியாது. அன்று தான் கள்ளநோட்டை ஒழிக்கப்போவதாகக் கூறிய பிரதமர்மோடி 500, 1000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். பின்னர், புதிய 500, 2000 ரூபாய்நோட்டு அறிமுகப் படுத்தப் பட்டது. ஆனால், கள்ளநோட்டு புழக்கம்மட்டும் நாட்டில் குறைந்த பாடில்லை. 2020 -21 ஆம் ஆண்டு ரிசர்வ்வங்கி வெளியிட்டவருடாந்திர ஆண்டறிக்கையில் கூட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பிறகு கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்து உள்ளதாகத்தெரிவித்திருந்தது. தற்போது மீண்டும் ரிசர்வ்வங்கி வெளியிட்ட அறிக்கையில் கடந்த இரண்டாண்டுகளில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து உள்ளதாகத்தெரிவித்துள்ளது. அதேபோல் ரூபாய் 2000 நோட்டு புழக்கமும் குறைந்து விட்தாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில், 2020 -21 ஆம் ஆண்டு ரூபாய் 500 கள்ளநோட்டுகள் 102% அதிகரித்து உள்ளதாகவும், ரூபாய் 2000 நோட்டுகள் ரூபாய் 54 %, ரூபாய் 200 நோட்டுகள் 11.7 % அதிகரித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து இது தான் ஒன்றியஅரசு செய்த ஒரேசாதனை என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து ராகுல்காந்தியின் ட்விட்டரில், "நாட்டின் பொருளாதாரத்தை மூழ் கடித்தது தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே துரதிர்ஷ்டவசமான சாதனை" என தெரிவித்து உள்ளார் செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0