Author: முத்தையா

Category: கல்வி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எஸ்.பி.கே. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ் ஹரிணி +2 தேர்வில் 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் சாதனை புரிந்துள்ளார்.

12ஆம் வகுப்பில் கணினி பயன்பாடுகள், பொருளியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பல மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

12 ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில்

99 மதிப்பெண்களைப் பெற்றுப் பல மாணவ மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.

தமிழ், கணினி அறிவியல், ஆங்கிலம் உட்படப் பல பாடங்களில் மாணவ மாணவிகள் 98 மதிப்பெண்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் வகுப்பு மாணவி எஸ் ஹரிணி 586 மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடம் பெற்றார். உயிரியல் வகுப்பு மாணவர் எஸ் பிரதீப் 579 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றார்.

கலைப்பிரிவு மாணவர் எஸ் மதன்குமார் 571 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றார். எஸ்.பி.கே. ஜெம்ஸ் பள்ளிகளின் சேர்மன் டாக்டர்.ஏ.எஸ்.பிரபு இதுபற்றிக் கூறும் போது, தற்சமயம் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

என்.சி.சி மாணவர்களுக்காக சேலம் பட்டலியன் படைப்பிரிவு நமது பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அறிவியல் கண்டுபிடிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக நமது எஸ் பி கே பள்ளியில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய ரோபோடிக்ஸ் ஆய்வுக் கூடம் வருகிற மே 13 அன்று இந்தியாவின் மேனாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களால் திறக்கப்பட உள்ளது. 

அன்றைய தினம் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டியாக நடைபெறுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்.

மாணவர் கல்வி கற்றலில் எந்தக் காரணம் கொண்டும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

அதனால் பொருளாதார வசதி இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்காக விவசாயிகள், விளையாட்டுப் பிரிவு, பெற்றோரை இழந்த பிள்ளைகள் உட்பட 16 வகைப் பிரிவுகளில் எஸ்.பி.கே. கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகைகள் வழங்கி வருகிறோம்.

பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களையும் பன்னிரண்டாம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண்கள் பெறும் அளவு சிறந்த கல்வியை வழங்கி வருகிறோம்.

இந்த அளவில் தேர்வு முடிவுகள் சிறப்பாக வரக் காரணமாக இருந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டி வாழ்த்துகிறேன் என்றார்.

இவ்வாறாக வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை இருபால் ஆசிரியர்களும், துணை முதல்வர்களும் மற்றும் பள்ளி முதல்வர் அவர்களும் பாராட்டி வாழ்த்தினர்.

எஸ் பி கே ஜெம்ஸ் பள்ளிகளின் இயக்குநர் அவர்களும் எஸ்.பி.கே. ஜெம்ஸ் பள்ளிகளின் சேர்மன் டாக்டர்.ஏ.எஸ்.பிரபு மற்றும் பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் டாக்டர் இஞ்சினியர் பி செங்கோடன் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:

#namakkalnews , #namakkalnewsintamil , #namakkalnewslive , #namakkalnewstoday , #namakkalnewstodaytamil , #school #namakkalnewtodayslive #namakkalnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #namakkaltodaynews , #namakkallatestnews , #namakkalnews , #Latesttamilnadunewstamil , #spiritual #devotional #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0