• முகப்பு
  • கல்வி
  • கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பள்ளிக்கு 1 லட்சம் நிதி உதவி.

கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பள்ளிக்கு 1 லட்சம் நிதி உதவி.

மகேஷ் குமார்

UPDATED: May 30, 2023, 7:28:59 PM

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில் 1985, 1990, உள்ளிட்ட ஐந்து பேட்ச் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான வர்ணம் பூசுவது, சிசிடிவி கேமரா அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முன்னாள் மாணவர்கள் ஏற்கனவே செய்து வந்த நிலையில் தற்பொழுது கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 2000- 2002ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் நேற்று ஒன்றிணைந்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. 

தொடர்ந்து 2000 - 2002 ஆம் ஆண்டு அப்போது பணியாற்றிய ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களையும் அவருடைய வளர்ச்சிகளையும் பற்றி பேசினார்கள். அப்போது நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தற்போது இன்ஜினியர், டாக்டர், கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பது சிறப்பு சிறப்பு மிக்கது இதுபோன்ற பணிகள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடவும் இதனால் அரசு பள்ளி மாணவர்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் ஆசிரிய பெருமக்கள் கூறினார்கள். 

அதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் முன்பு நடந்த சம்பவங்கள் குறித்தும் கலந்து பேசி மகிழ்வித்தனர். முன்னாள் மாணவர்கள் தங்களின் பங்களிப்பாக ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரசு பள்ளி கட்டிடங்களை வர்ணம் பூசம் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended