இலங்கையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது ; துருக்கி மற்றும் துபாயிலிருந்து இறக்குமதி.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்கோதுமை மாவு உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இன்று (05) காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், *கோதுமை மாவுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது நடைமுறைச் சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்வதற்கு துருக்கி மற்றும் துபாயிலிருந்து கோதுமை மாவு இறக்குமதி செய்ய அங்குள்ள ஏற்றுமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு காரணமாக சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் கூட கோதுமை மாவின் சில்லறை விலை அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் சில்லறை விலை ரூ. 380 – 420 ஆக காணப்படும் நிலையில் மொத்த விலை 350முதல் 400 ரூபா வரை காணப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை செய்தியாளர் அஹ்மத் அஸ்ஜத்.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஜுராசிக் தண்டர் தமிழ் திரைப்படம் | Jurassic Thunder Hollywood Movie | Tamil Dubbed Movie | #tamilmovie #tamildubbedmovies #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

சிட்டிசன் கலெக்டர் கடத்தல் காட்சி மிஸ் பண்ணாம பாருங்க | Citizen Super Hit Scene | Ajithசிட்டிசன் கலெக்டர் கடத்தல் காட்சி மிஸ் பண்ணாம பாருங்க | Citizen

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

பள்ளியில் நடந்த கொடுரம் | 215 school students dead

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மிக்கு அடுத்த ஆப்பு ரெடி

Sponsor Ad
விளையாட்டுகள்