ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை இந்திய தேசியக்கொடி (மூவர்ண கொடி) ஏற்றிட வேண்டும்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்நாகப்பட்டினம் மாவட்டத்தில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் எதிர்வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை இந்திய தேசியக்கொடி (மூவர்ண கொடி) ஏற்றிட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகித்திடப்படவுள்ளது. 

அக்கொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதேபோல் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒளிரும் தேசியக்கொடி அமைக்கப்படவுள்ளது. 

தனியார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னர் இந்த தேசிய கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்திடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்,  தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தலைவா திரைப்படம் | Thalapathy Vijay | Thalaiva Movie #thalaivamovie #vijaymovie #cinema

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 beautiful actresses of Hollywood

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டெல்டா போர்ஸ் 3 ஹாலிவுட் சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படம் | Delta Force Hollywood Tamil Movie

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

சைனீஸ் சோடியாக் தமிழ் டப்பிங் திரைப்படம் |Chinese Zodiac Tamil Dubbed Full Movie | jackie john | #tamildubbedmovies #tamilmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்