
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
விலைவாசி உயர்வுக்கு காரணமாக ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விரோத பா.ஜ.க ஆட்சியை கண்டித்தும் விலைவாசி உயர்வை கண்டித்தும் நாகை தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் R.N.அமிர்தராஜா தலைமை வகித்தார். நாகை நகர தலைவர் P.உதயச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் நாகூர் VSA தஸ்லீம், மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், மாவட்ட செயலாளர்கள் JKT.ராஜ்குமார், G.R.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாநில சிறப்பு பேச்சாளரும் விவசாயப்பிரிவு மாநில பொதுச்செயலாளருமான ஜி.சுர்ஜித் சங்கர் கண்டன உரை ஆற்றினார். விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், அரிசி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக அரசு பதவி விலக வேண்டும் கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் கீழையூர் வட்டாரத்தலைவர் என்.சிங்காரவேலு, தலைஞாயிறு மூத்த தலைவர்கள் வி.கனகராஜ், ஆர்.நடேசன், தலைஞாயிறு வட்டார தலைவர் வேணுகோபால், தலைஞாயிறு நகர தலைவர் எழிலரசன், கீழையூர் வட்டாரத் துணை தலைவர் பாலு, தலைஞாயிறு நகர துணை தலைவர் மணிகண்டன், பாரதிராஜா, திருமருகல் வட்டாரத்தலைவர் சீனிவாசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பனைமேடு தமிழரசன், இளைஞர் காங்கிரஸ் கீழையூர் ஆனஸ்ட்ராஜ், மாணவர் காங்கிரஸ் துசேந்திரன் உட்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்கள், மாணவர் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ், அனைத்து முண்ணனி பிரிவுகளின் தேசிய தோழர்கள் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.
