
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நாகை அடுத்த பொரவச்சேரி ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில், காது, மூக்கு, கண், தொண்டை, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பிரத்யேக மருத்துவர்களும், எலும்பு முறிவு, குழந்தைகள் மருத்துவம், போன்றவைகளுக்கு தனித்தனியே சிறப்பு மருததுவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. மேலும், கலைஞரின் வருமுன் காப்பீட்டு திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அங்கேயே பயனாளிகள் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது. பொது சுகாதாரத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுகணக்கான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.
