
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
வங்கிகளில் உரிமை கோரப்படாமலிருக்கும் ரூ. 48,262 கோடி! வங்கிகளில் டெபாசிட்முதிர்வு தொகை மற்றும் வங்கிக்கணக்கிலிருக்கும் தொகையை பத்து ஆண்டுகளுக்குமேல் எடுக்காமலிருந்தால் அவற்றை உரிமைக்கோரப்படாத பணமாக வகைப் படுத்துவர். அந்தவகையில் கடந்த 2021 - 22 நிதி ஆண்டில் ரூ. 48,262 கோடி பணம் இந்தியவங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்தத் தொகையில் பெரும்பான்மையான பணம் எட்டு மாநிலங்களிலிருந்து டெபாசிட்செய்யப்பட்டு உள்ளது. அவை தமிழகம், பஞ்சாப், குஜராத், மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், கர்நாடகா, பீகார் மற்றும் தெலுங்கானா / ஆந்திரா மாநிலங்கள் ஆகும். ரிசர்வ்வங்கியின் விதிமுறைகளின்படி, பத்து ஆண்டுகளாகச்செயல்படாத சேமிப்பு மற்றும் நடப்புக்கணக்குகளிலிருக்கும் தொகை, மேலும் முதிர்வு அடைந்த டெபாசிட்கள் ஆகியத்தொகையை டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்குமாற்றுவர். இருப்பினும் பின்னாளில் டெபாசிட் செய்தவர்கள் தங்கள்பணத்தை வட்டியுடன் பெற உரிமையுண்டு. வங்கி டெபாசிட்கள் குறித்து குடும்பத்தினருக்கு தகவல்தெரிவிக்காமல் விடுவது, பல்வேறு வைப்புத்தொகை இருக்கும் போது ஒன்றை மறந்து விடுவது, வயது முதிர்ந்ததம்பதியில் டெபாசிட்செய்தவர் இறந்து விட்டால் அவரது துணைக்கு எப்படிபணத்தை பெறுவது எனவழி முறைத்தெரியாமல் போவது போன்ற காரணங்களால் இந்த உரிமைக் கோராத தொகை அதிகரித்து வருவதாக ரிசர்வ்வங்கி தெரிவித்து உள்ளது. 2020 - 21 நிதி ஆண்டில் இந்த தொகை 39,264 கோடியாக இருந்தது. 2021 - 22 ல் சுமார் ரூ. ஒன்பது ஆயிரம் கோடி அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அதிக உரிமைக்கோரப்படாத தொகையுள்ள தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் விழிப்புணர்வை முன்னெடுக்க ஆர்.பி.ஐ முடிவு செய்து உள்ளது. 8 மாநிலங்களின் மொழிகளிலும் மற்றும் ஹிந்தி, ஆங்கிலத்திலும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் இருக்கும். இதன்மூலம் பலர் டெபாசிட்களை பெறுவர். செய்தியாளர் பா. கணேசன்