
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
மதுரைநகரில் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்த போலீசாருக்கு உதவும்வகையில் 160 டிராபிக்வார்டன்கள் நியமிக்கப் பட உள்ளனர். இதற்கு சம்பளம்கிடையாது. சேவைசெய்ய விரும்பும் பட்டதாரிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் சேரலாம். வயது 24 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். வாரம் இரண்டுநாட்கள் மாலை 6:30 மணிமுதல் இரவு 8:30 மணிவரை சுழற்சி முறையில் சேவைசெய்ய வேண்டும். திருவிழா, வி.ஐ.பி. க்கள் வருகையின்போதும்பணிபுரிய வேண்டியிருக்கும். ஒவ்வொரு மாதம்கடைசி ஞாயிறுகாலை 6:30 மணிக்கு ஆயுதப் படையில் கவாத்துபயிற்சி அளிக்கப்படும். சேர விரும்புவோர்..... [email protected] மூலமாகவோ, தெற்காவணி மூலவீதி போக்கு வரத்து துணை கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாகவோ ஆக. 15 ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாமென கமிஷனர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார். செய்தியாளர் பா. கணேசன்