
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கபட்டது .இவ்மனுவில் கூறியிருப்பதாவது. நிஷா மகளிர் சுய உதவி குழு ஆனைக்குளம் ஊராட்சியில் மாற்று திறனாளி, இளம் விதவைகள் மற்றும் 12 நபர்களை கொண்டு மிகவும் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் தனி பிரிவிலும் அரசு கலை கல்லூரியில் நேரிலும் சென்று கேன்டீன் கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள். அவர்கள் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நிலுவையில் உள்ளது. மேற்படி நிலுவையில் உள்ள நிலையில் திட்ட இயக்குனர் அவர்கள் 06-06-2022 அன்று மனு கொடுக்காத மதி சுய உதவி குழுவிற்க்கு பரிந்துரை செய்து விட்டதாக கூறிவிட்டார்கள். மதி மகளிர் சுய உதவி குழுவில் உள்ளவர்களுக்கு சுரண்டையில் 3 ஹோட்டல்கள் உள்ளன. இப்பொழுது அந்த கேன்டீன் ஒரு பெண் மற்றும் ஆண்கள் மட்டுமே நடத்துகிறார்கள். ஐயா, நிஷா மகளிர் சுய உதவி குழுவில் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளனர். மதி மகளிர் சுய உதவி குழு உணவகத்தை ரத்து செய்து நிஷா மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

