
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
கும்பகோணம் அருகே சன்னாபுரம் பணிக்காரத்தெருவை சேர்ந்த தமிழ்செல்வத்தின் மகள் அபிராமி (21) இவரும், தேப்பெருமாநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த மணி மகன் பாரதி (18) ஆகிய இருவரும் சன்னாபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றும் போது காதல் வயப்பட்டு பின்னர் இருவரும் இரு வீட்டாருக்கு தெரியாமல், திருப்பூரில் வேலைக்கு சென்று அங்கு கணவன் மனைவியாக குடும்பம் நடத்தியதாக தெரிகிறது . இதில், தற்போது அபிராமி (21) 9 மாத கர்ப்பிணியாக உள்ளார், இது குறித்து அபிராமியின் பெற்றோர், பாரதி குடும்பத்தாரிடம் அபிராமியை திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, அவர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது இதனையடுத்து அபிராமி குடும்பத்தினர் இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாரதியுடன் திருமணம் செய்து வைக்க கோரி புகார் அளித்திருந்தனர். இது குறித்து இருதரப்பினரிடமும் காவல்துறையினர் பேசி வந்த நிலையில், அபிராமி மற்றும் அவரது பெற்றோர் தரப்பினர் இன்று, அனைத்து மகளிர் காவல் துறையினர் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, மகளிர் காவல் நிலையம் முன்பு பிளக்ஸ் பேனருடன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவலயறிந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் மகளிர் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் அவர்களிடம் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து பேசிய பின் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

