
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டசமுத்திரம் கிராமம் தெற்கு தெருவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் இன்று இரவு சுமார் 11 மணியளவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு தாலி மற்றும் கோயில் உண்டியல் காணிக்கை ரூபாய் பத்தாயிரம் தூக்கி சென்றனர். அதே ஊரைச் சேர்ந்த சசி என்பவர் கோயிலில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தனர் பொதுமக்கள் வருவதற்குள் திருடர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிராம நாட்டாமை சோழ தரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் பாண்டியன் வினோத்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தொடர்ந்து கோவில்களை குறிவைக்கும் திருட்டு கும்பலை இதுவரை கைது செய்யாதது ஏன் என காவல்துறையின் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றன. ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.