
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், "கிளாக்குளம்" பகுதியை சேர்ந்த பேச்சியப்பன் (வயது.57) என்பவர், வீரவநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில், இவருடன் பணிபுரியும் ஆசிரியையான, இம்மாவட்டம் சேரன்மகாதேவி, காலங்கரை தெருவை சேர்ந்த, லீனா(வயது.57) என்பவரும், லீனாவின் சகோதரியான, பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்த, சலோமி(வயது.60) என்பவரும், ஒன்றாக சேர்ந்து, "டெனிமிஸ் ஆப்" (TNEMIS App) மூலமாக , வீரவநல்லூர் ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில், பணி புரிந்து வரும், சக ஆசிரிய- ஆசிரியைகளின், வங்கி கணக்குகளின், தகவல்களை பெற்று, சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும், ஆசிரியர்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில், சக ஆசிரியர்களுடைய முகவரியில், உண்மையான புகைப்படங்களை மாற்றியும், போலியாக கையொப்பமிட்டும், 54 லட்சம் ரூபாயினை, கடனாகப்பெற்று, பணமோசடி செய்துள்ளனர். இந்த மோசடியை அறிந்த சக ஆசிரிய- ஆசிரியைகள், தங்களுடைய கணக்கில், பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், ஆசிரியர் பேச்சியப்பன் தலைமையில், நேரடியாக, "புகார் மனு" அளித்தனர். அந்த மனுவின் மீது, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாவட்ட மதுவிலக்கு பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு வகிக்கும் மீனாட்சி நாதனுக்கு, உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்து, தீவிர விசாரணை நடத்தி, பண மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை லீனா மற்றும் அவருடைய சகோதரி சலோமி ஆகிய இருவரையும், இன்று (ஆகஸ்ட்.5) காலையில், "கைது" செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். இவ்வழக்கில், சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு, மிகக்குறுகிய காலத்திற்குள், குற்றவாளகளை கைது செய்த, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். திருநெல்வேலி செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்
