திருநெல்வேலி பழைய பேட்டை, "அரசு" மருத்துவமனைக்கு, "விலையில்லா" மருத்துவ உபகரணங்கள் வழங்கிய, அரசுசாரா "தனியார்" தொண்டு நிறுவனம்!குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், "அரசுசாரா" தன்னார்வ தொண்டு நிறுவனமான " மின்னல் அறக்கட்டளை" சார்பில், நெல்லையை அடுத்துள்ள, "பழையபேட்டை"யில் அமைந்துள்ள, "மிகப்பழைமை"யான அரசு மருத்துவமனைக்கு, "விலையில்லா உபகரணங்கள்" வழங்கும் நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் வைத்து, நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, "மின்னல் அறக்கட்டளை" நிறுவனரும், தலைவருமான எஸ்.மில்லத் இஸ்மாயில், "தலைமை" வகித்தார். 

வர்த்தகர்கள் அமைப்பை சேர்ந்த எஸ்.மவுலானா, "முன்னிலை" வகித்தார். "வழக்கறிஞர்" சேக் முகம்மது, அனைவரையும் வரவேற்று பேசினார். "கரண்ட் கட்" ஆகும் நேரங்களில், தானாகவே "கரண்ட்" வழங்கிடும் இன்வெர்ட்டர், நோயாளிகளின் இதயத்துடிப்பை, துல்லியமாக கண்டறிய உதவும், அதிநவீன மானிட்டர், ரத்த அழுத்தம் காட்டிடும் சோதனை கருவி, கணணி, மின்விசிறிகள் உள்ளிட்ட, பல்வேறு விலையில்லா சாதனங்களை, "மின்னல் அறக்கட்டளை" சார்பாக, "பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்" மு.அப்துல் வகாப் வழங்கினார்.

"மருத்துவ அலுவலர்" டாக்டர் ஜெய்னி, அவற்றை பெற்று கொண்டு, "மின்னல்" அறக்கட்டளையினருக்கு, "அரசு மருத்துவமனை" சார்பில், "நன்றி" தெரிவித்தார். 

நிகழ்ச்சியில், நெல்லை மாநகராட்சி "மேயர்" பி.எம்.சரவணன், "துணை மேயர்" கே.ஆர்.ராஜூ, "நெல்லை மண்டல சேர்மன்" செ.மகேசுவரி, 17-ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் ஏ.ஆர்.ஜவஹர், "தொழில் அதிபர்கள்" எம்.ஏ.கே.பீர்முகம்மது, டி.எஸ்.எம்.ஓ.காஜா உதுமான், சித்தீக் நியமத்துல்லா, எஸ்.நிஸ்டார் அலி உள்பட, பலர் கலந்து கோண்டனர்.

திருநெல்வேலி செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நாய்களைப் பற்றி இவ்வளவு விஷயம் இருக்கா !!!

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யுவன் சங்கர் ராஜா சூப்பர் ஹிட் பாடல்கள் | Yuvan Shankar Raja Super Hit Songs #yuvansongs #songs #yuvanshankarajasongs

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Ground Zero - The Deadly Shift Full Movie

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஐஸ் பிரேக்கர் தமிழ் டப்பிங் திரைப்படம் | The Ice Braker | Hollywood Tamil Dubbed Movie | #tamildubbedmovie #tamilmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்