தன் ஊழியரிடமே திருட்டு பழியை சுமத்தி பணத்தை அபகரித்த கடை உரிமையாளர்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்தேனி மாவட்டம், உத்தமபாளையம் கள்ளி மேட்டு தெருவில் வசிக்கும் பசீர் முகமது என்பவரது மகன்முகமது பாசித் (22) கடந்த2019 முதல் 4 ஆண்டுகளாக சின்னமனூர் ராயல் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பைப்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார் கடந்த 2022 ஜூன் மாதம் கடை உரிமையாளருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அவர் வேலையிலிருந்து நின்றுவிட்டார் .

வேலையிலிருந்து நின்ற பின் கடை உரிமையளர் தனது கடையில் வேலை பார்த்த முகமது பாசித் அங்குள்ள பொருட்களை கையாடல் செய்து விட்டார் என பழி சுமத்தி இவரிடமிருந்து பொருட்களுக்கு ஈடாக முகமது பாசித் வங்கி கணக்கில் உள்ள ரூ 3. லட்சம் மற்றும் இவரது இரு சக்கர வாகனம் மற்றும் இவரது செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும், மேலும் அவரது கூலி வேலை செய்யும் படிக்காத பெற்றோர்களை தனது கடைக்கு வரவழைத்து விசயங்களை கூறி பத்து லட்ச ரூபாய் தர வேண்டுமென அடியாட்கள் வைத்து அடித்து மிரட்டி வெற்று பத்திரத்தில் கையொப்பம் வாங்கி அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முகமது பாசித் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள பழக்கடை ஒன்றில் நான்கு நாட்களாக வேலை பார்த்து வந்தார்.

வழக்கம் போல் பழக்கடை வேலைக்கு சென்ற முகமது பாசித்தை 02.8.2022 அன்று காலை சுமார் 10 மணியளவில் சின்னமனூர் ராயல் கடை உரிமையாளர் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபரும் இரு சக்கர வாகனத்தில் வந்து பழக்கடையில் இருந்த முகமது பாசித்திடம் தகராரில் ஈடுபட்டு அவரை தாக்கிவிட்டு பத்து லட்சம் உடனடியாக தராவிட்டால் உன்னை கொலை செய்வேன் என மிரட்டிச் சென்றுள்ளதாகவும். 

காயங்களுடன் இருந்த முகமது பாசித் அதன் பின் வேலைக்குச் சென்ற தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்த பின் அவர்கள் தனது மகனை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்து அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

தேனி மாவட்ட செய்தியாளர் ரங்கநாதன்.


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யூதர்கள் ஏன் இவ்வளவு கொடூரமானவர்கள் ? #worldnews #judaism #history

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Kristen Steward Biography || Sexy & Hot Hollywood Actress

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தலைவா திரைப்படம் | Thalapathy Vijay | Thalaiva Movie #thalaivamovie #vijaymovie #cinema

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நடிகர் எம் ஆர் ராதாவின் நகைச்சுவை காட்சி | MR Radha Comedy Scene

Sponsor Ad
விளையாட்டுகள்