சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  நா.அங்கையற்கண்ணி அவர்கள் தலைமையில் இன்று (04.08.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:

இந்த ஆண்டு சுதந்திர தின விழா மிக சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. துறை அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பட்டியலை உரிய காலத்திற்குள் தயாரித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அவர்களிடம் வழங்க வேண்டும். மேலும் விழா நடைபெறும் மேடை, தியாகிகள் அமரும் இடம், பயனாளிகள் அமரும் இடம் ஆகியவற்றினை முறையாக கண்காணித்து தேவையான இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல், முக்கிய பிரமுகர்களை விழாவிற்கு அழைத்தல், சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு தேவையான பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக செய்ய தகுந்த முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும் விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடந்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தின் அருகில் போதுமான அளவில் தற்காலிக கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை தேவைகளை பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தேவையான அளவு முகக்கவசம் அணிதல், சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், வெப்பமானிகள் கொண்டு சோதனை செய்தல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா நோய் பரவாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)  சுப்பையா, துணை காவல் கண்காணிப்பாளர் வளவன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர், மாவட்ட ஆட்சியரின் அலுவலக பொது மேலாளர் சிவா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Hollywood actress hot Beauty #shorts

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

பாய்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி | Boys Comedy Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Star Wars Battle Front 2 ( All Cut Scenes )

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நாய்களைப் பற்றி இவ்வளவு விஷயம் இருக்கா !!!

Sponsor Ad
விளையாட்டுகள்