சாமி தரிசனம் செய்வதற்கு சொகுசு காரில் வைத்திருந்த பேக்கை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது !குரல் தேர்வு


இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்

சென்னை வியாசர்பாடி ஆர்கேபி நகரை சேர்ந்த சரத் என்பவர் அங்கு உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அவர் தனது குடும்பத்தினருடன் கும்பகோணம் அதனை சுற்றியுள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக , கும்பகோணம் வந்துவர் உச்சி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள சாரங்கபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கீழ வீதியில்  காரை நிறுத்தி முற்படும்போது , அங்கு வந்த ஒரு நபர் நீங்கள் வாகனத்தில் மோதி விட்டு வந்ததாக கூறுகிறார் .

அவர் காரை விட்டு இறங்கி தனது வாகனத்தின் மீது மோதிய  தடயம் உள்ளதா  என்று பார்ப்பதற்குள் அந்த மர்ம நபருடன் வந்த மற்றொருவர் சரத்தின் காரில் இருந்த கைப்பையை திருடிச் சென்று விடுகிறார் .

மீண்டும் காரை எடுத்து  ஓரமாக நிறுத்த முற்படும்போது  அவரது காரில் இருந்த பை காணாமல் போனது தெரிய வருகிறது அதில் 25,000 ரூபா பணம் ஏடிஎம் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இருந்ததாக தெரியவருகிறது.

தகவலயறிந்த  கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அழகேசன் மற்றும் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு பார்த்தபோது இதில் 5 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து  கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர். 

அதிகமாக நடமாட்டம் உள்ள  உச்சி பிள்ளையார் கோவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Sponsor Ad


இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

The most important beautiful places in the world

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மு க ஸ்டாலின் அவர்களின் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கொரோனாவின் விழிப்புணர்வு - வீடியோ,awarness video, awarness video in tamil,covid

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

இன்றைய நிலைமையை அன்றைக்கே கூறிய எம் ஆர் ராதா | M R Radha Super Hit Scene

Sponsor Ad
விளையாட்டுகள்