
குரல் தேர்வு
இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்
தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மீதும் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் மீதும், வரும் 23 ஆம் தேதியிலிருந்து நடவடிக்கை எடுக்கப் படுமென போலீசார் எச்சரித்து உள்ளனர். ஜன 1 ந்தேதியிலிருந்து, இம்மாதம் 15 ஆம் தேதி வரை, இரு சக்கரவாகன விபத்தில், 98 பேர் உயிரிழந்தனர். 841 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில், தலைக் கவசம் அணியாமல் இரு க்கர வாகனம் ஓட்டியவர்கள் 80 பேர். பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள், 18 பேர். எனவே, விபத்துகுறைப்பு நடவடிக்கையாக, 23 ந்தேதியிலிருந்து, தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மீதும் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் மீதும், நடவடிக்கை தீவிரப் படுத்தப்படும் என, சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று அறிவித்தனர். செய்தியாளர் பா. கணேசன்


