குரல் தேர்வு
இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்
தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 கொரோனாவகை கண்டறியப் பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். செய்தியாளர்சந்திப்பில் பேசிய அவர், செங்கல்பட்டுமாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதியவகை கொரோனா தொற்று கண்டறியப் பட்டு, தற்போது குணமாகி விட்டதாக கூறினார். சம்பந்தப் பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரி சோதனை செய்யப் பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார். ஆனால், புதிய வகைகொரோனா பரவும்தன்மையில் இல்லையென்றும் மற்ற மாநிலங்களில் ஓமைக்ரான் BA 4 கொரோனாவகை பரவியிருக்கிறதா என்பதை மத்தியஅரசு தெளிவு படுத்தும் எனவும் கூறியுள்ளார். ஆப்ரிக்கா நாடுகளில் கண்டறியப் பட்ட BA 4 கொரோனா வகை தமிழகத்திலும் கண்டறியப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்