காதலியை கொன்று தானும் தூக்கில் தொங்கிய காதலன்குரல் தேர்வு


இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்

திருச்சூரில் ஓட்டல் அறையில் கள்ளக் காதலிக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கழுத்தைநெரித்து கொன்று வாலிபர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளமாநிலம் திருச்சூர் அருகேயுள்ள கல்லூர்பகுதியை சேர்ந்தவர் ரஸ்மா (வயது31). கணவரை விவாகரத்து செய்து விட்டார்.

 தற்போது 6 வயதில் ஒருகுழந்தை உள்ளது. இந்த நிலையில் பாலக் காட்டைச் சேர்ந்த கிரிதாஸ் (வயது39) என்பவருடன் ரஸ்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக் காதலாக மாறி உள்ளது.

 கிரிதாஸ் ரஸ்மாவின் அண்ணனின் நண்பர்ஆவார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இரண்டு பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்துவந்து உள்ளனர்.
இதற்கு இடையே இரண்டு பேரும் திருமணம்செய்ய தீர்மானித்து இருந்ததாகவும் கூறப் படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளக் காதலர்கள் திருச்சூரில் உள்ள ஒருலாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். ஆனால் நேற்று பகல்முழுவதும் அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப் படவில்லை.

 இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் விரைந்துசென்று பார்த்தனர். அப்போது கிரிதாஸ் தூக்குப்போட்டு இறந்தநிலையில் சடலமாகக்கிடந்தார்.
ரஸ்மா கட்டிலில் இறந்துக்கிடந்தார். 

இதுகுறித்து திருச்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனே போலீசார் விரைந்துச்சென்று விசாரித்தனர். அதைத்தொடர்ந்து இரண்டு பேரின் உடல்களையும் கைப் பற்றி பிரேத பரி சோதனைக்காக திருச்சூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்தச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

 முதலில் இரண்டு பேரும் தற் கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார்கருதினர்.
ஆனால், தீவிர விசாரணையில் ரஸ்மாவுக்கு கிரிதாஸ் அதிகஅளவு மதுகொடுத்து பின்னர் அவரைக்கழுத்தை நெரித்துக்கொன்றது தெரியவந்தது.

 ரஸ்மா இறந்ததை உறுதிசெய்த பிறகு கிரிதாஸ் தூக்கிட்டு தற் கொலை செய்துகொண்டுள்ளார்.

 இரண்டு பேரும் திருமணம்செய்ய தீர்மானத்து இருந்த போதிலும் ரஸ்மா திருமணத்திற்கு மறுத்துவிடுவாரோ? என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கிரிதாஸ் கொலைசெய்திருக்கலாம் என போலீஸ்தரப்பில் கூறுகின்றனர்.செய்தியாளர்
க. துர்கா மதன்குமார்


Sponsor Ad


இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரத்தக்கண்ணீர் திரைப்படம் | M R Radha | Ratha Kaneer Full Movie #rathakaneer #fullmovie #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஸ்ரீ மூலவருக்கு நடைபெற்ற விசேஷ அபிஷேக தீபாராதனை காட்சிகள் உங்களுக்காக

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Model fail Compilation | Happy Land

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Death on the Nile / Kiss Scenes — Linnet and Simon

Sponsor Ad
விளையாட்டுகள்