குடி குடியை கெடுக்கும் குடி உயிர்களை குடிக்கும். குடியரக்கனால் மூன்று பெண் குழந்தைகள் உயிர் பலிகுரல் தேர்வு


இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்

ஸ்ரீபெரும்புதூர்:


காஞ்சிபுரம்மாவட்டம், ஒரகடம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட சின்ன மதுரப் பாக்கம் பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ் (வயது40).

இவரது மனைவிகீதா. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள்.

கோவிந்தராஜ் வேலையின்றி இருந்துவந்ததாகவும், அவர் மதுவுக்கு அடிமை ஆனவர் என்றும் தெரிகிறது.

 இதனால் அவ்வப்போது கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கோவிந்தராஜ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து உள்ளார்.

 அப்போது கீதா வீட்டிலில்லை. வீட்டில் வழக்கம் போல் தகராறு செய்ததால் முதல் மகள் நந்தினி (வயது16), 4 ஆவது மகள் தீபா (வயது10) ஆகியோர் கண்டித்து உள்ளனர்.

 இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு உள்ளது.
குடிபோதையில் இருந்தகோவிந்தராஜ் அருகிலிருந்த கட்டையைஎடுத்து சிறுமிகளிருவரையும் தாக்கி உள்ளார்.

 சிறுமிகள் கூச்சல் இட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் கோவிந்தராஜ் தாக்குதலால் சிறுமிகளிருவரும் மயங்கிவிழுந்து இறந்து உள்ளனர்.


மூத்தமகள் தற் கொலை
இது குறித்து ஒரகடம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

 போலீஸார் இரண்டு சிறுமிகளின் சடலங்களையும் உடற் கூறு ஆய்வுக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 கோவிந்தராஜிடம் போலீஸார் தீவிரவிசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தாய் வேலைக்குசென்றிருந்த நிலையில் தனது இரண்டு மகள்களை தந்தையே குடி போதையில் அடித்துக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவரதுகொடுமை தாங்காமல் முதல்மகள் நதியா தீக்குளித்து தற் கொலை செய்து கொண்டு உள்ளார்.

 அப்போதே போலீஸார் கோவிந்தராஜ் மீது தீவிரநடவடிக்கை எடுத்திருந்தால் இரண்டு குழந்தைகள் மரணத்தை தடுத்து இருக்கலாம் என அந்தப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.செய்தியாளர்
பா. கணேசன்


Sponsor Ad


இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

இன்று போய் நாளை வா திரைப்படம் | Indru Poi Nalai Vaa Full Movie | #bakyaraj #tamilmovie #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Ilayaraja Melody Songs | இளையராஜாவின் இன்னிசை பாடல்கள்

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யூதர்கள் ஏன் இவ்வளவு கொடூரமானவர்கள் ? #worldnews #judaism #history

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ராஜராஜ சோழன் திரைப்படம் | Raja Raja cholan Full movie #rajarajacholan #movies #cinema

Sponsor Ad
விளையாட்டுகள்