
குரல் தேர்வு
கும்பகோணம் அருகேயுள்ள கள்ளப்புலியூரில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு வருகை தந்த மேனாள் இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான் ஒன் திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை, 4ம் ஆண்டு பொறியியல் மாணவர்களின், செயற்கை நுண்ணறிவு பேருந்து வடிமைப்பை நேரில் கண்டு வியந்து பாராட்டி பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார். அப்போது அவரும் கல்லூரி தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் கோதண்டபாணி, முதல்வர் பாலமுருகன் உட்பட பலர் உடனிருந்தனர். வாகனங்களில் இருந்து சுமார் ஒன்னரை அடி முதல் 2 அடி வரையிலான தூரம் பிளைண்ட் ஸ்பார்ட் என கூறப்படுகிறது, கண்ணிற்கு புலப்படாத பகுதி, இந்த இடைவெளியில் சின்னஞ்சிறு குழந்தைகள் வரும் போதோ, நிற்கும் போதோ அது ஓட்டுநரின் கவனத்திற்கு வராமல், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட சாத்தியமாகிறது, இத்தகைய விபத்துக்கள் இந்திய அளவில் தமிழகத்தில் அதிகம் என சமீபத்திய ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 29ம் தேதி ஆழ்வார்திருநகரில், இது போன்ற ஒரு சம்பவத்தில், தீட்ஷத் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான், இதனை கருத்தில் கொண்டு இதனை குறைந்த செலவில் தடுக்க கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களான சஞ்சை பாலாஜி, ஜோஸ்வா ஆரோக் ஆஸ்டின், பகலவன் மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகிய நான்கு மாணவர்கள் இணைந்து பேராசிரியர் சுந்தரசெல்வன் வழிகாட்டுதலின் பேரில், கண் மறைவு பிரதேசங்களையும் ஓட்டுநருக்கு தெளிவாக காட்டும் வகையில், 4 கண்காணிப்பு கேமராக்கள், 4 சென்சார் கருவிகள், இதனை காட்சிப்பதிவாக காட்டும் மானிட்டர், எச்சரிக்கை செய்யும் அலாரம், ஏஐ பிரேக்கிங் என தானாகவே வாகன இயக்கத்தை தடுக்கும் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கருவியை மிக குறைந்த செலவில் (ரூபாய் 6 ஆயிரம் செலவில்) உருவாக்கியுள்ளனர். இதனை அதிக அளவில் தயார் செய்யும் போது, இன்னும் இது குறைய வாய்ப்புள்ளது இதனை அனைத்து விதமான வாகனங்களிலும், வாகனங்களில் பெரிய மாறுதல் செய்யாமல் பொருத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர் இதனால் வருங்காலத்தில் இத்தகைய விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தடுக்கப்படும் என உறுதி கூறுகின்றனர் இதனை வடிவமைத்த மாணவர் குழுவினர். நிகழ்ச்சிக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த மேனாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தற்போது விண்வெளி குறித்த படிக்க அதிக அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் குறிப்பாக 100, 200 இடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவிகிறது தற்போது மருத்துவர்கள் தங்களது மகன், மகளை மருத்துவம் படிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் இருப்பவர்கள் அவர்களது குழந்தைகள் ஐஏஎஸ், ஐபிஎஸ்ஸாக வரவேண்டும் என விரும்புகிறார்கள் ஆனால் விவசாயிகள் தங்கள் வீட்டு குழந்தைகள் விவசாயத்திற்கு வர விரும்புவதில்லை, ஆனால் இந்நிலை விரைவில் மாறும், அதற்காண தொழிற்நுட்பங்களும், நவீன கருவிகளும், சாதனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன, எனவே சேற்றில் இறங்காமலேயே விவசாயம் பார்க்கும் காலம் வரும். வேளாண்மையை வேறு ஒரு இடத்தில் இருந்த பிற பணிகளை போல செய்ய முடியும் என்ற நிலை வரும், அப்போது போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளும் தங்கள் வீட்டு குழந்தைகள் விவசாயத்திற்கு வரவேண்டும் என விரும்பும் காலம் இந்தியாவில் விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவித்தார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.


