
குரல் தேர்வு
கஞ்சா, குடி பழக்கத்துக்கு அடிமையான ஹேம்நாத் தங்கள் மகளை கொலை செய்து செய்துவிட்டார் என சித்ராவின் பெற்றோர் கூறினர். சின்னத்திரை நடிகையானசித்ரா கடந்த 2020 டிசம்பர் 9 ஆம்தேதி சென்னை பூந்தமல்லி அடுத்தநசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நசரத்பேட்டபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து தற் கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். சித்ரா தற் கொலைவழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப் பட்டது. போலீசார் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகைதாக்கல் செய்த நிலையில் ஜாமீனில்விடுதலை ஆகிய சித்ராகணவர் ஹேமநாத் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சித்ரா உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதற்காக, சித்ராவின் பெற்றோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஹேம்நாத் தப்பிக்க இந்த வழக்கைதிசை திருப்ப தவறான தகவல்களை பரப்பிவருவதாகவும், ஏற்கனவே காவல் துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனவும், சித்ராவின் உடலை எரிக்கக்கூறி வலியுறுத்தியதாகவும் காவல் துறையினர் அப்போதுதங்களை மிரட்டியதாகவும், தற்போது காவல் துறையினர் நியாயமான முறையில் மறு விசாரணை நடத்த வேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர்கள் வலியுறுத்தினர். சித்ராகழுத்தில் கடித்ததடயங்கள் இருப்பதாகவும், ஹேம்நாத் தான்கொலை செய்து விட்டு தற் கொலைசெய்து கொண்டது போலநாடகமாடி இருப்பதாகவும் சித்ராவின் பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர். சித்ராவின் பெற்றோருக்கு மர்மநபர்கள் மிரட்டல் கொடுப்பதாகவும், இந்தவழக்கில் இருந்து தப்பிக்கவும் சித்ராபெயரில் உள்ளவீட்டை அபகரிக்கவும் ஹேம்நாத் முயற்சித்து வருவதாக சித்ராவின் பெற்றோர் கூறியுள்ளனர். சித்ரா தற்கொலை செய்து கொண்ட இடத்தில் கஞ்சாவைகைப்பற்றி இருப்பதாக போலீசாருக்கு கூறியுள்ளநிலையில், கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்திற்கு ஹேம்மநாத் அடிமையாகி தன்னுடையமகளை கொலை செய்து விட்டதாகவும், சித்ரா உயிருடன் இருக்கும்பொழுது வெள்ளைத் தாள்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும் சித்ராவின் பெற்றோர் கூறுகின்றனர். கடந்த ஆட்சியில் உரியமுறையில் காவல் துறை விசாரணை நடத்தவில்லை எனவும் தற்போது இது குறித்து முதலமைச்சரை சந்தித்துமுறையிட உள்ளதாகவும் சித்ராவின் பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர். செய்தியாளர்: க. துர்கா மதன்குமார்