ஒரு வருடத்தில் குழந்தை அல்லது 5 கோடி இழப்பீடு - ஹரித்வார் நீதிமன்றத்தில்குரல் தேர்வு


ஒரு வருடத்தில் பேரக் குழந்தை பெற்றுதர மகனுக்கும், மருமகளுக்கும் உத்தரவிட வேண்டும். இல்லையெனில் 5 கோடி இழப்பீடு பெற்றுதர வேண்டும் என மகனின்தாய் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஹரித்வார் மாவட்ட நீதிமன்றத்தில் தாய் ஒருவர் தாக்கல் செய்துள்ள ஒருமனுவில் ஒருவருடத்தில் பேரக் குழந்தை பெற்று தர மகனுக்கும், மருமகளுக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளார். அப்படிபெற்றுத் தராவிடில் ரூபாய்  5 கோடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் எனவும், மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

அவரது மனுவில், என்னுடைய மகன் விமானியாக உள்ளான். அவனை அமெரிக்காவில் படிக்க வைத்தேன். மகனின் எதிர்காலம் கருதி திருமணம் செய்து வைத்து தேனிலவுக்கு தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி தாய்லாந்து சென்று வர ரூபாய்  5 லட்சம் செலவானது. மகனை வளர்க்க ரூபாய் 2 கோடிவரை செலவு செய்து உள்ளேன்.

அன்றாட செலவுக்கு ரூபாய் 20 லட்சம் வரை கொடுத்து உள்ளேன். ரூபாய் 65 லட்சம் மதிப்பிலான ஆடிகார்என பல வசதிகளை செய்து கொடுத்து உள்ளேன்.

ஆனால், மாதசம்பளம் கூட மருமகள் வீட்டாரே வாங்கி கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் என்மருமகள் என்மகன் மீதே பொய் வழக்குகளை தொடர ஆரம்பித்தார். அப்போது மகனுக்கு குழந்தைபிறந்தால் பிரச்சனை சரியாகி விடும் என நினைத்தேன். அவர்களுக்கு 2016 டிசம்பர் 9 ஆம் தேதி திருமணமான நிலையில் இன்றுவரை தனக்கு பேரக் குழந்தை இல்லை. இதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்து இருக்கிறேன்.


என்வம்சம் இதோடு முடிந்து விடும் என்ற அச்சம் எனக்கு வந்துவிட்டது. அடுத்த ஒரு வருடத்தில் என் மகனும், மருமகளும் பேரக் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிடவேண்டும் இல்லை எனில் எனக்கு இழப்பீடாக ரூபாய் 5 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.


செய்தியாளர்:
க. துர்கா மதன்குமார்


Reaction :
Sponsor Ad


இந்தியா
© THE GREAT INDIA NEWS

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

தமிழ்நாடு
© THE GREAT INDIA NEWS

மீதி 6 பேரும் விடுதலை முயற்சிகள் துரிதம்.

விளையாட்டுகள்
சென்னை
© THE GREAT INDIA NEWS

மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் !!!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

சைனீஸ் சோடியாக் தமிழ் டப்பிங் திரைப்படம் |Chinese Zodiac Tamil Dubbed Full Movie | jackie john | #tamildubbedmovies #tamilmovies #movies

விளையாட்டுகள்
மாவட்டம்
© THE GREAT INDIA NEWS

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

விளையாட்டுகள்
புதுச்சேரி
© THE GREAT INDIA NEWS

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 12 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.