இன்றைய முக்கிய செய்திகள் 14.5 2022



குரல் தேர்வு


ராமநாதபுரம் :

கமுதி அருகே அரசு பள்ளி கட்டடத்தின் மேற்கூரையின் காரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஆனைசேரி பள்ளிக்கட்டட மேற்கூரையில் காரை விழுந்த நிலையில் மாணவர்கள் இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, மாணவர்கள் மரத்தடியில் இருந்ததால் தப்பித்த நிலையில் ஆசிரியர் ஒருவர் லேசான காயமடைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


திருவள்ளுர் :

திருவேற்காட்டைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் ஜனனி (11). 
இவர்  படிக்காமல் வீட்டில் வரைபடம் வரைந்து கொண்டிருந்ததை அவரது தாய் சரண்யா திட்டியுள்ளார். 
இதனால் மனமுடைந்த ஜனனி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். 
தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை :

புளியந்துறை ஊராட்சி செயலர் சண்முகம் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை முறையாக பராமரிக்காததால் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


காரைக்காலில் :

ஜவுளிக் கடையில் துணிகளை திருடி கைவரிசை காட்டிய இரு பெண்கள் கையும் களவுமாக சிக்கினர்.


சென்னை :

மயிலாப்பூரில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்குத் திரும்பிய 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் :

எடப்பாடி அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து - பெண்கள் உட்பட 30 பேர் படுகாயம்.
திருச்செங்கோடுக்கு துக்க நிகழ்வுக்கு சென்றபோது விபரீதம்.


திருச்சி :

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த 3 விமானங்களில் ரூ.1.28 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.


புதுக்கோட்டை :

திருமயம் அருகே உள்ள புலிவலத்தில் கட்டிட வேலைக்கு சென்று விட்டு  திரும்பியபோது, டாடா ஏஸ் வாகனம் சாலையோர பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்து:
9 பேர் காயம்,  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.



புதுக்கோட்டை : ராஜேந்திரபுரத்தில் பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை மாநில அமைச்சர் திரு மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.


விருதுநகர் : 

ரூ 6.24 லட்சம் கையாடல் புகாரில் ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க மேலாளர்(பொ) தங்க மாரியப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் . கையாடல் புகாரில் காசாளர் வேல்முருகனையும் சஸ்பெண்ட் செய்து விருதுநகர் துணைப்பதிவாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


திருவண்ணாமலை :

இளம்பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் கர்நாடக போலீசாரால் தேடப்பட்டுவந்த நாகேஷ் பாபு (34) என்பவர் திருவண்ணாமலையில் கைது. சாமியார் வேடம் அணிந்து சுற்றித்திரிந்தவரை, உள்ளூர் போலீஸ் உதவியுடன் கர்நாடக போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.










Reaction :
Sponsor Ad


இந்தியா
© THE GREAT INDIA NEWS

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

தமிழ்நாடு
© THE GREAT INDIA NEWS

மீதி 6 பேரும் விடுதலை முயற்சிகள் துரிதம்.

விளையாட்டுகள்
சென்னை
© THE GREAT INDIA NEWS

மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் !!!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

20 Most Awkward Red Carpet Moments

விளையாட்டுகள்
மாவட்டம்
© THE GREAT INDIA NEWS

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

விளையாட்டுகள்
புதுச்சேரி
© THE GREAT INDIA NEWS

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 12 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.