இன்றைய முக்கிய செய்திகள் 13.5.2022குரல் தேர்வு


இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்

காஞ்சிபுரம் :

காஞ்சிவரதா் கோயில் வைகாசி திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


திருச்சி :

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


சேலம் :

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி.


திருவள்ளூர் :

திருவேற்காட்டில் உள்ள எஸ்.எஸ்.பாண்டியன் ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட ஸ்ரீதர்(22), பரத்குமார்(20) ஆகியோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க திருவேற்காடு போலீசில் பாதிக்கப்பட்ட 2 பேர் புகார் அளித்துள்ளனர்.


தருமபுரி :

நல்லாம்பட்டி அருகே விவசாய தோட்டத்தில் இருந்த மின்வேலியை மிதித்த மக்னா யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விருதுநகரில் :

படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை கண்டித்த அரசு பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் கல்லூரி மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அரசு பேருந்துகளை இயக்காமல் ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு போக்குவரத்து இயங்கியது.


கன்னியாகுமரி :

அரசு போக்குவரத்து பணிமனை முன்பு  நள்ளிரவு நடந்த விபத்தில் கரும்பாட்டூர் மற்றும் சாமிதோப்பு பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பலி , ஒருவர் படுகாயம்.


விருதுநகர் :

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு  பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

 
தூத்துக்குடி :

அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காணரமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காணரமாக 5வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 3வது அலகில் மட்டும் 210 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.


கன்னியாகுமரி :

வானிலை மையம் எச்சரிக்கையால் கன்னியாகுமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குளச்சல்,முட்டம், தேங்காய்பட்டினம், பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.


Sponsor Ad


இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

புதுப்பேட்டை சூப்பர் ஹிட் காட்சி | Pudupettai Best Scene

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மிக்கு அடுத்த ஆப்பு ரெடி

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Bruce Lee's The Way Of The Garden Hit Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

முதல்வன் சூப்பர் ஹிட் காட்சி | Super Hit Dont Miss it Scene

Sponsor Ad
விளையாட்டுகள்