மக்கள் அதிகாரம் சார்பில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.குரல் தேர்வு


திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் சார்பில்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான எழுவர் விடுதலை மற்றும் கோவை குண்டுவெடிப்பில் விசாரணைக் கைதிகளாக கைதாகி இருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம்  மனு அளிக்கப்பட்டது. 

மக்கள் அதிகாரத்தின் மண்டல அமைப்பாளர் சண்முகசுந்தரம் அளித்துள்ள இந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக முதல்வருக்கு என குறிப்பிடப்பட்டிருப்பதாவது,தமிழக அரசு பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்வதாக அறிவித்து இருந்தது. 

அதன் பேரில் 700 பேரை விடுவிப்பதாக அரசு அறிவித்திருக்கிறது, ஆனால் இந்த அறிவிப்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேர் மற்றும் கோவை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இஸ்லாமியர்கள் மீதான வழக்கும் 20 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணையிலேயே இருக்கிறது. 

தண்டனை வழங்கப்படாமல் இத்தனை ஆண்டுகளாக சிறையில் வைத்திருப்பது என்பது மிகப்பெரும் கொடுமையாகும். எனவே தமிழக அரசு கைதிகளின் விடுதலை பட்டியலில் இவர்களையும் சேர்த்து விடுவிக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை  கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் திருவாரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி செயலாளர் சுல்தான் ஆரிபின், அமைப்புச் செயலாளர் உமர் பாரூக், நகர தலைவர் முகமது ஷெரீப், சிஐடியு போக்குவரத்து ஊழியர்கள் சங்க கிளை தலைவர் மோகன், மக்கள் அதிகாரம் மாவட்ட குழு உறுப்பினர் ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Reaction :
Sponsor Ad


இந்தியா
© THE GREAT INDIA NEWS

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யூதர்கள் ஏன் இவ்வளவு கொடூரமானவர்கள் ? #worldnews #judaism #history

தமிழ்நாடு
© THE GREAT INDIA NEWS

மீதி 6 பேரும் விடுதலை முயற்சிகள் துரிதம்.

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மணல் கயிறு நகைச்சுவை திரைப்படம் | Manal kayiru Full Comedy Film | #svesekar #visu #tamilmovie #movies

விளையாட்டுகள்
சென்னை
© THE GREAT INDIA NEWS

மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் !!!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யுவன் சங்கர் ராஜா சூப்பர் ஹிட் பாடல்கள் | Yuvan Shankar Raja Super Hit Songs #yuvansongs #songs #yuvanshankarajasongs

விளையாட்டுகள்
மாவட்டம்
© THE GREAT INDIA NEWS

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எம்எல்ஏக்களின் சலுகைகள் இவ்வளவா !!!

விளையாட்டுகள்
புதுச்சேரி
© THE GREAT INDIA NEWS

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 12 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தளபதி விஜயின் காதல் பாடல்கள் | Vijay's love song #lovesong #songs