
குரல் தேர்வு
இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88 தேர்வு மையங்களில் 22 ஆயிரத்து 501 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.மேலும் 100-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வெழுதினார். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு நோய்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளான சானிடைசர் வழங்கப்பட்டு பாதுகாப்பான முறையில் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி தேர்வு சமயங்களில் தடையில்லா மின்சாரம் மற்றும் குடிநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மேற்பார்வையில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் 3 மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

