அப்பள தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கும் சூழ்நிலை.குரல் தேர்வு


நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் பகுதியில் கடந்த 60 ஆண்டு காலமாக அப்பள தொழிலில் அதிகமான நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட அளவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அப்பள தொழிலில் ஈடுபட்டு வருகின்ற சூழ்நிலையில் அவர்களுக்கு குறைவான கூலி கொடுப்பதாக கூறப்படுகிறது . 

மேலும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு முன்பணம் கொடுத்து கொத்தடிமை போல் வேலை வாங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஞ்சுப் பேட்டை,  சிறுகாவேரிபாக்கம், ஒலிமுகம்மது பேட்டை, பல்லவர் மேடு, கைலாசநாதர் கோவில் மேட்டு தெரு, வெள்ளகுளம், பல்லவர் மேடு போன்ற பகுதியில் வசித்து வருகின்றார்கள். 

இந்தத் தொழிலில் மாவை பிசைந்து இடித்து பின்பு அதை துண்டாக்கி தரும் வேலை மிக முக்கியமானது. அந்த வேலை நடந்தால் தான் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதை அப்பளமாக மாற்றி வெயிலில் காயவைத்து பின்பு பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்புவார்கள் . 

இந்த சூழ்நிலையில் மாவு பிசைந்து இடித்து துண்டாக்கி தரும் வேலையில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 1 வருடமாக கூலி உயர்த்தி கொடுக்கவில்லை என்றும் எங்களை கொத்தடிமை போல் நடத்துகிறார்கள் என்றும் முன்பணம் வாங்கி விட்ட காரணத்தினால் எங்களுக்கு உடல்நிலை சரியில்லாத போதும் எங்கள் வீட்டில் உள்ளவர்களை மனைவியையோ, அல்லது பிள்ளைகளையோ கண்டிப்பாக இந்த தொழிலை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட கொத்தடிமை தனத்திலிருந்து எங்களை  மாவட்ட நிர்வாகம்  மீட்க வேண்டும். 

மேலும் இதே தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை உயர்த்தி அளிக்க வேண்டும், உடல்நிலை பாதிக்கப்படும் போது காப்பீடு இல்லாததால் காப்பீடு திட்டம் செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட அப்பளத் தொழிலாளர்கள்  ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் நின்று கோஷமிட்டார்கள். 

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் 2016 ம் ஆண்டு  அப்பள தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்பட்டது. திமுக அரசாங்கம் வந்து 12 மாதம் முடிய உள்ள சூழ்நிலையில் அப்புறம் தொழிலாளர்களின் கூலி உயர்வை பற்றி சிறிதும் கண்டுகொள்ளவில்லை. 

கூலி உயர்வு கேட்டு தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எங்கள் கோரிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

விலைவாசி விண்ணைத்தொடும் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில் எங்களைப்போன்ற கூலி தொழில் செய்யும் தொழிலாளிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.

அப்பள தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்தினால் இந்தத் தொழிலை நம்பி உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட   அப்பளம் செய்யும்  தொழிலாளர்கள்  வருமானம் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் சூழ்நிலையை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என பல சமூக அமைப்புக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

இன்றைய செய்திகள் காஞ்சிபுரம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,kanchipuram news,kanchipuram latest news tamil,kanchipuram today news tamil,More than 5,000 workers have been left without income as a result of the strike


Reaction :
Sponsor Ad


இந்தியா
© THE GREAT INDIA NEWS

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கவுண்டமணி செந்தில் சிறப்பு காமெடி | Goundamani Senthil Super Comedy

தமிழ்நாடு
© THE GREAT INDIA NEWS

மீதி 6 பேரும் விடுதலை முயற்சிகள் துரிதம்.

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

விவேக்கின் சூப்பர்ஹிட் நகைச்சுவை காட்சி | Vivek's Super Hit Comedy Scene

விளையாட்டுகள்
சென்னை
© THE GREAT INDIA NEWS

மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் !!!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருவள்ளுவர் பற்றி அதிசயம் ! Thiruvalluvar, thiruvalluvar history, about thirukural,

விளையாட்டுகள்
மாவட்டம்
© THE GREAT INDIA NEWS

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஓஸ்ட் சைனீஸ் டப்பிங் திரைப்படம் | The Host Tamil Dubbed Full movie | Oscar Winner Film #dubbedmovies #movies #tamilmovies

விளையாட்டுகள்
புதுச்சேரி
© THE GREAT INDIA NEWS

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 12 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

உஷார்! 1 மணி நேரத்துக்கும் மேல் உட்கார்ந்து பணி செய்தால் உயிருக்கு ஆபத்து