• முகப்பு
  • கல்வி
  • ஜும்மாவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளுமாறு பணிப்பாளர் வேண்டுகோல்

ஜும்மாவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளுமாறு பணிப்பாளர் வேண்டுகோல்

ஏ.எஸ்.எம்.ஜாவித்

UPDATED: May 5, 2024, 5:42:50 PM

2024 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நாளை திங்கட் கிழமை 06 ஆம் திகதி தொடக்கம் எதிர் வரும் 15ஆம் திகதி வரை நடைபெற இருப்பதால் குறித்த காலப்பகுதியில் வெள்ளிக்கிழமை தினங்களிலும் ஜும்மா தொழுகைக்கு பின்னரும் பரீட்சைகள் நடைபெற இருப்பதால் ஜும்மா பிரசங்க நேரத்தை கட்டாயமாக சுருக்கி பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் கதீமார்களுக்கு அறிவித்தல் செய்யுமாறு அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கை பொறுப்பாளர்களிடம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் கேட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பரீட்சைக் காலப்பகுதியில் பரீட்சை நிலையங்களுக்கு அருகில் உள்ள பள்ளிவாசல்கள் வெளி ஒலி பெருக்கிகளின் ஒலியை குறைத்து மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் எழுதுவதற்கும் உதவும் வகையில் சகல பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களும் மேற்படி விடயத்தை கவனத்தில் கொண்டு செயற்படுவது சிறந்ததாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

  • 1

VIDEOS

Recommended