• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விசிக பேரில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையரிடத்தில் மனு.

விசிக பேரில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையரிடத்தில் மனு.

JK

UPDATED: Sep 24, 2024, 9:52:34 AM

திருச்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி மாவட்டத் துணை அமைப்பாளர் ஜெயக்குமார் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவரிடம் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளராக மக்கள் பணி செய்து வருகிறேன்.

கடந்த 20ஆம் தேதி அன்று எனது வாட்ஸ் அப்பில் திருச்சி எக்ஸ்பிரஸ் என்ற சமூக வலைத்தளதில் பள்ளி தாளாளரிடம் மிரட்டி பணம் கேட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது.

அந்த புகாரை காஜாமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி தாளாளர் புகார் கொடுத்தாக கூறப்பட்டுள்ளது.

புகாரில் ஷாகுல் அமீது என்பவரின் மகன் அப்துல்லாஹ் என்பவர் எனது பள்ளி அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது குழந்தைகள் எங்களது பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர் விசிக கட்சியில் முக்கிய பதிவு இருப்பதாக தனது கட்சிக்கு நிதி வழங்க வேண்டும் என தொடர்பு கொண்டு மிரட்டி பணம் கேட்டார்.

அவருடைய நடவடிக்கை சரி இல்லாததால் நிதி தர மறுத்துவிட்டதால் ஏரியாவில் ஸ்கூல் நடத்த முடியாது என்று மிரட்டி உள்ளதாகவும், மேலும் விசிக பிரமுகர்கள் சிலர் சேர்ந்து கொண்டு பணம் கேட்டுள்ளதாகவும் பொய்யான புகார் கொடுத்துள்ளார்.

கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் திருமாவளவன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, திட்டமிட்டு கட்சிக்கு அவப்பை ஏற்படுத்தும் வகையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி தாளாளரும் அவரை சார்ந்த நபர்களும் அப்துல்லாவிற்கு பள்ளியின் தாளாளரான அகமதுல்லாவிற்கும் உள்ள தனிப்பட்ட விரோதத்தை பயன்படுத்தி எங்களுடைய கட்சிக்கு ஆவப் பெயர் உண்டாக்குகிறார்.

மேலும் தாளாளரின் தூண்டுதல் பெயரில் அபுதாகிர் என்பவர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்.

எனவே, அல்ஜெயாதுஸ் சாதிக் தனியார் பள்ளி தாளாளர் அஹ்மத்துல்லா, அபுதாஹிர், ரியாஸ்அலி மற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், 

தொல்.திருமாவளவன் அவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டே சாதிய உள்நோக்கத்துடன் அவரையும், விசிக கட்சியின், நிர்வாகிகளையும் இழிவு படுத்தி பொய் புகார் தயார் செய்து திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பி கட்சிக்கு அவர் பெயர் ஏற்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வின்போது மாநகர மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட்லாரன்ஸ், வழக்கறிஞர்கள் அணியை சேர்ந்த வழக்கறிஞர்கள் பழனியப்பன், தீனா, மற்றும் பாலா உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

VIDEOS

Recommended