ஸ்ரீமுஷ்ணம் அருகே பவழங்குடி கிராமத்தில் மூன்று பெண்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காது ஏன்?குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பவழங்குடி கிராமத்தில் பட்டியல் இன மக்கள்  சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில்,

இதில் சுமார் 15 குடும்பங்கள் அம்மன் கோயில்  அருகாமையில் கணபதி தொப்புளன் குட்டை பகுதியில் வசித்து வருகின்றனர், கண்ணுசாமி  பெயரில் சுமார் 60 ஆண்டுக்கு மேல் 62 சென்ட் பட்டா மற்றும் சிட்டா பத்திரம் உள்ள நிலையில் ,

தற்போது பழங்குடி கிராமத்தில் குடிநீர் திட்டம் , சாலை வசதி வந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் கணபதியின் பட்டா இடத்தில் சாலை அமைப்பதற்கு மற்றும் குடிநீர் அமைப்பதற்கு கிராம மக்களை தூண்டிவிட்டு நூறு ஆண்டு காலமாக  வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டை இடிப்பதற்கு பல ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று கணபதியின் குடும்பத்தார் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உள்பட மூவரை பொதுமக்கள் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கருவேப்பிலங்குரிச்சி போலீசார் விசாரணை என்ற பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதோடு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் , ஊராட்சி ஒன்றிய அலுவலர் மீதும் பலமுறை கணபதி தரப்பினர் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட கணபதி தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த பிரச்சனை காரணமாக விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

15 MOST EMBARRASSING CELEBRITY MOMENTS IN HISTORY

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

2022 சுனாமி தமிழ் டப்பிங் திரைப்படம் | Tsunami 2022 Tamil Dubbed Hollywood Movie | #tamilmovies #ramildubbedmovies #Cinema

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

புதுப்பேட்டை சூப்பர் ஹிட் காட்சி | Pudupettai Best Scene

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கொரோனாவின் விழிப்புணர்வு - வீடியோ,awarness video, awarness video in tamil,covid