கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி
மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், கலைத்திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவினை  மாவட்ட
ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக  பள்ளிகளிலும், வட்டார அளவிலும் மற்றும் மாவட்ட அளிவலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது. 

அதன்படி, இன்று
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகள், குத்துவிளக்கேற்றி தொடங்கி
வைக்கப்பட்டது.

கலைத்திருவிழாவின் முக்கிய நோக்கமே மாணவர்களின் கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி
கலைத்திறன்களை வெளிக்கொணருவதற்காகவும், கலைப் பண்பாட்டு கொண்டாட்டங்களை
ஒருங்கிணைப்பதற்க்காகவும் இப்போட்டிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்புவரை
பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு பிரிவாகவும், 

9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு
இரண்டாம் பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மூன்றாவது பிரிவாகவும்
பிரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஓவியம் வரைதல், மெல்லிசை பாட்டு, நாட்டுப்புறப்பாடல், வில்லுப்பாட்டு, வாத்திய கருவிகள், கிராமிய நடனங்கள், கும்மி நடனம், தனி நடனம், நாடகம், தனி நபர் நடிப்பு, பலகுரல் பேச்சு, கதை எழுதுதல், கவிதை எழுதுதல், பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், கட்டுரைப்போட்டி, பட்டிமன்றம் மற்றும் அனைத்து வகையான நாட்டுப்புற நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைத்திருவிழா
போட்டிகள் நடத்தப்படும்.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றிபெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாநில
அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க செய்யப்படும். 

மாநில அளவில் நடைபெறும்
கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில்
கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். 

மேலும், மாநில அளவில் வெற்றி வெறும் மாணவர்களின் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள்
வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து  அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் மாநில அளவில் பரிசுகள் பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும். 

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு
கல்வியோடு தனித்திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி செய்தியாளர் அஜய் குமார்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Bruce Lee's Enter The Dragon Super Hit Fight Scene

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Largest Forest Area Countries | Forest resources are the health of the world

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டெல்டா போர்ஸ் 3 ஹாலிவுட் சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படம் | Delta Force Hollywood Tamil Movie

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

விவேக்கின் சூப்பர்ஹிட் நகைச்சுவை காட்சி | Vivek's Super Hit Comedy Scene