தஞ்சை வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு கூடுதல் நேரம் பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் தஞ்சை திருவையாறு புறவழிச்சாலையில் மறியல்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நாள் தோறும் 43 எண் உள்ள பேருந்து காலை 6.30. 7.30.11.30.3.30. 5.30.7.30.8.30 ஆகிய 7 முறை சென்று வந்துள்ளது. 

இந்த நிலையில் தற்போது காலை 8.30 மற்றும் மாலை 5.30 ஆகிய இரு நேரங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். 

இதுக்குறித்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அரசு பேருந்தை வழி மறித்து பள்ளி மாணவ, மாணவிகள் 8ம் நம்பர் கரம்பை அருகில் தஞ்சை திருவையாறு புறவழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் இந்த சாலையில் ஒரு கி.மீ தூரத்திற்கு பேருந்துகள் அணி வகுத்து நின்றன. மாணவ, மாணவிகள் சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

கல்லூரி மாணவி பேட்டி மகாலட்சுமி

தஞ்சாவூர் செய்தியாளர் ஆர்.ஜெயச்சந்திரன்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம்

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நாய்களைப் பற்றி இவ்வளவு விஷயம் இருக்கா !!!

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top Hollywood actress | most beautiful Hollywood actress

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஓஸ்ட் சைனீஸ் டப்பிங் திரைப்படம் | The Host Tamil Dubbed Full movie | Oscar Winner Film #dubbedmovies #movies #tamilmovies