விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில்அரசின் மின் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

கும்பகோணத்தில் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கோட்டாட்சியர்  பூர்ணிமா தலைமையில், கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் ஆகிய 3 வட்டங்களை உள்ளடக்கிய கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில் வட்டாட்சியர்கள்  வெங்கடேஷ்;வரன், பூங்கொடி, சுசிலா, உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர் 

இக்கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், சிலத்துறை அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், இதனை சுட்டிக்காட்டி, விவசாயிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

மேலும் மத்திய அரசு, மின் திருத்த சட்டத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு கிடைக்கும் இலவச மின்சாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது, மேலும் மத்திய அரசு, பி எம் கிஸான் எனும் விவசாயிகள் வெகுமதி திட்டத்தின் இருந்த ஏராளமான விவசாயிகளை அதில் இருந்து திடீரென நீக்கியுள்ளது,

இதனை கண்டித்தும், விவசாயிகளின் மின் இணைப்பிற்கும், ஆதார் அட்டையை இணைக்க வற்புறுத்துவதை கண்டித்தும், இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், 

இந்திய கம்யூ மாவட்ட செயலாளர் பாரதி ஆகியோர் தலைமையில் ஏராளமான விவசாயிகள் மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழங்கங்களை எழுப்பியபடி, வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இக்கூட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்த விவசாயிகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்க ஆவண செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும், 

மேலும் நெல்லிற்கு கூடுதல் விலையாக குவிண்டாலுக்கு ரூபாய் 2,940 விலை அறிவித்து கொள்முதல் செய்யும் கேரள முதல்வருக்கு, அதுபோலவே குவிண்டாலுக்கு ரூபாய் 2,660 அறிவித்து  கொள்முதல் செய்யும் சத்தீஸ்கர் முதல்வருக்கும்  பாராட்டி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும், 

வாழைப்பழம், சீமை இலந்தை மற்றும் பேரிச்சம்பழம் என மூன்று  வகை பழங்கள் வழங்கி நன்றி தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. 

பேட்டி : சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், செயலாளர்,   தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.

கும்பகோணம் மாவட்ட செய்தியாளர் ரமேஷ்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ராஜராஜ சோழன் திரைப்படம் | Raja Raja cholan Full movie #rajarajacholan #movies #cinema

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ராஜராஜ சோழன் திரைப்படம் | Raja Raja cholan Full movie #rajarajacholan #movies #cinema

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படம் | Kannedhire Thondrinal Full Movie | #prasanth #simran #tamilmovie #movies

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Largest Forest Area Countries | Forest resources are the health of the world