வட மாநில நபரின் சடலத்தை சுடுகாட்டில் புதைக்க திமுக ஊராட்சித் தலைவர்கள் மறுத்ததால் ஏரியில் குடிநீர் நீரேற்றும் பம்புகள் அருகே பிணத்தை புதைத்த அவலம்குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் புஷ்வர் (வயது 62). இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த நெய்குப்பம் பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு கொண்டே அங்கு தங்கி வருகிறார்.

இரும்பு கட்டுமான பணியின்  போது அவருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.

இவருடைய சடலத்தை ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி என்பவரின் கணவர் திமுக கட்சியை சேர்ந்த டி.எல்.மணிகண்டன் என்பவர் ஊத்துக்காடு சுடுகாட்டில் சடலத்தை புதைக்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அதேபோல் அருகே உள்ள கிதிரிப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பொன்மொழி சண்முகம் அவர்களும் இங்கு புதைக்க அனுமதிக்க முடியாது என கூறிவிட்டார்.

வாலாஜாபாத் காவல்துறையினர் இரண்டு ஊராட்சிகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சடலத்தை புதைக்க வேண்டுகோள் விடுத்தும் அதை திமுக கட்சியின் இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்களும் அனுமதி மறுத்துவிட்டனர். 

பின்னர் புஸ்வர் அவர்களின் சடலத்தை நெய் குப்பம் கிராமத்தில் குடிநீர் நீரேற்றும் குழாய் க்கு அருகே அந்த ஊர் மக்களுக்கு தெரியாமல் ஜேசிபி வைத்து 10 அடி பள்ளம் தோண்டி சடலத்தை புதைத்து அவரின் துணிமணிகளை அங்கே வீசிவிட்டு ஊதுபத்தி மற்றும் உப்பு பாக்கெட்களை தூவி விட்டு ஊத்துக்காடு நபர்கள் சென்றுவிட்டனர்.

அந்தப் பகுதியில் ஆடு மாடுகள் மேய்க்க சென்ற நபர்களுக்கு ஏரியில் பிணம் புதைக்கப்பட்டுள்ள தகவல் தெரிந்து நெய்க்குப்பம் கிராமத்தில் பரவியதால் அந்த கிராமத்து மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.

மழைக்காலத்தில் அதிகமான தொற்று வியாதிகள் பரவுகின்ற இந்த வேளையில் வடமாநில நபரின் இறந்த உடலை நீரேற்றம் பம்புகளுக்கு அருகிலேயே சாலை ஓரமாக ஏரியில் பிணத்தை புதைத்த நபர்கள் மீதும் திமுக கட்சியை சேர்ந்த இரண்டு ஊராட்சி பெண் தலைவர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் அந்த பிணத்தை புதைத்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்குகிறது. ஏரி கண்மாய் கோடிக்கலங்கள் வழியாக நீர் வெளியேறும் .அப்போது இந்த சடலம் மேலே எழும்பி மக்களை அச்சுறுத்தும் வகையில் காணப்படும்.

எனவே குடிதண்ணீர் மாசு ஏற்படுவதற்கு முன்னதாகவே இந்த சடலத்தை இங்கிருந்து அப்புறப் படுத்தி இரண்டு ஊராட்சிகளில் ஏதாவது ஒரு சுடுகாட்டில் பிணைத்து புதைக்க வேண்டும் அல்லது காஞ்சிபுரத்தில் தாயார் குளம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் . 

மேலும் இது தொடர்பாக கோட்டாட்சியர் நேரடியாக விசாரணை செய்ய வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் வேண்டுகோள் வைத்தார்.

குடிநீர் நீரேற்றும் குழாய்கள் அங்குள்ள காரணத்தினால் இந்த பிணம் அழுகி அதனுடைய கழிவுகள் குடிதண்ணீரில் கலக்கும் அபாயம் உண்டு. எனவே இந்தப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள பிணத்தை மீட்டு சுடுகாட்டில் புதைக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.

சட்டப்படி ஒரு சடலத்தை இடுகாடு , சுடுகாடு அல்லது மின் மயானத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும். இது போன்ற மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் நீர்நிலைகளிலும் சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது, இது பல தப்பானவர்களுக்கு முன்னுதாரணமாகிவிடும் . 

ஆதார் அட்டை முதல் கொண்டு எதுவுமே இல்லாமல் பிணத்தை இப்படி புதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஆர்வலர்கள் கூறி மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

பேட்டி - பாஸ்கர் நெய் குப்பம் .பகுதி வாசி.

காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் லட்சுமி காந்த்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Star Wars Battle Front 2 ( All Cut Scenes )

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கருடா சூப்பர் ஹீரோ ஹாலிவுட் திரைப்படம் | Garuda superhero Hollywood movie

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

முதல்வன் சூப்பர் ஹிட் காட்சி | Super Hit Dont Miss it Scene

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Chuck & Sarah 4x02 End Scene