பெரியகுளம் அருகே திரவியம் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி ?குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

நவ.24- தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் திரவியம் கல்வி குழுமம் இயங்கி வருகின்றது.  இங்கு பட்டப்படிப்பு, செவிலியர் படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட பாடப்பிரிவில் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்நிலையில்,  கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வரும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கோம்பை பண்ணைபுரத்தைச் சேர்ந்த  19 வயதான கல்லூரி மாணவி நேற்று தற்கொலை  செய்யும் நோக்கில் கல்லூரி மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. 

அந்த மாணவிக்கு பலத்த காயம் ஏற்படவே சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கல்லூரி நிர்வாகத்தினர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பெரியகுளம் வட்டாட்சியர் காதர் செரிப்  சம்பவ இடத்தில் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும் , காயமடைந்த மாணவியை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாணவி தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெரியகுளம் சகமாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாணவி கல்லூரி கட்டிட மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய என்ன காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பெரியகுளம் பகுதியில் கல்லூரி மாணவியின் இந்த செயல் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதனால், திரவியம் கல்லூரிக்கு குழந்தைகளை அனுப்பி உள்ள பெற்றோர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தேனி மாவட்ட செய்தியாளர்; இரா.இராஜா.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

பாய்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி | Boys Comedy Scene

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

வேடிக்கை என் வாடிக்கை திரைப்படம் | Full Movie | #visu #svesekar #tamilmovies #movies

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நாய்களைப் பற்றி இவ்வளவு விஷயம் இருக்கா !!!

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருவள்ளுவர் பற்றி அதிசயம் ! Thiruvalluvar, thiruvalluvar history, about thirukural,